Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் முன்பு அடி வாங்கிய ஆசிரியை

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (10:32 IST)
நாகர்கோவில் அரசு பள்ளியில் மாணவர்கள் முன்பு ஆசிரியையை, தலைமை ஆசிரியை கன்னத்தில் அறைந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


 

 
நாகர்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி அதிகாரி ஆய்வு செய்ய வருவதாக தகவல் வந்துள்ளது. இதனால் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மாணவர்களை தயார் படுத்தும் பணியிலும், ஆவணங்களை ஒழுங்கு படுத்தும் பணியிலும் ஈடுப்பட்டார்.
 
இதற்காக பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைக்கும் சென்று பார்வையிட்டார். அப்போது ஒரு வகுப்பு அறையில் சத்தம் கேட்டுள்ளது. உடனே அந்த வகுப்பறைக்குள் நுழைந்த தலைமை ஆசிரியை அங்கிருந்த் வகுப்பு ஆசிரியையிடம் மாணவர்களை கண்டிக்காதது ஏன்? என்று கேட்டுள்ளார். 
 
மேலும் கல்வி அதிகாரி ஆய்வுக்கு வரும் நேரம் என்பதால் கோபம் அடைந்த தலைமை ஆசிரியை கன்னத்தில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்குமார் கூறினார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்   
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments