Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்..!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (13:26 IST)
எட்டாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கன்னியாகுமாரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
 கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இயற்பியல் ஆசிரியர்  அருள் ஜீவன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. 
 
இதனை அடுத்து கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த அவர் கைது செய்யப்பட்டார். எட்டாம் வகுப்பு மாணவனை ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்று தனியாக இருக்கும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இதனால் சிறுவன் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது. 
 
சிறுவனின் தந்தை அளித்த புகாரை அடுத்து  ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்