Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுக்கடை திறக்க அனுமதி, டீக்கடை திறக்க அனுமதி இல்லையா? டீ பிரியர்கள் வருத்தம்!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (19:27 IST)
மதுக்கடை திறக்க அனுமதி, டீக்கடை திறக்க அனுமதி இல்லையா? டீ பிரியர்கள் வருத்தம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கிலும் தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சற்று முன் அறிவித்த அறிவிப்பு ஒன்று ஜூன் 21 வரை ஊரடங்கு நீடிக்கும் என்றாலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன
 
குறிப்பாக ஒருசில கடைகள் திறக்கவும் டாஸ்மாக் கடைகள் திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சலூன் கடைகள் அழகு நிலையங்கள் உள்பட பல கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு இருந்த போதிலும் டீக்கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்படாதது டீ பிரியர்கள் மிகுந்த வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்
 
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மதுக்கடைகளை திறக்க அனும்தித்த தமிழக அரசு, உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் டீக்கடைகளை திறக்க அனுமதிக்காதது ஏமாற்றத்தைத் தருவதாக டீ பிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் நிபந்தனைகளுடன் பேருந்துகளை இயக்கலாம் என்றும் பேருந்துகளை இயக்க தொடர்ந்து தடைவிதித்தது அதிருப்தி தெரிவித்ததாகவும் மக்கள் தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. உடலை தானமாக வழங்க கடிதம்..!

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது.. கழிவறையில் வழுக்கி விழுந்ததால் கை எலும்பு முறிவு..!

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு முற்றுகைப் போராட்டமா? விந்தையிலும் விந்தை: தவெக அறிக்கை..!

ஜூன் மாத சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் முன்பதிவு எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments