Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடைகளை குறைக்க முடியாது.! குடிப்பவர்களை குறைக்க வேண்டும்.! அமைச்சரின் மாஸ்டர் பிளான்.!!

Senthil Velan
வியாழன், 11 ஜூலை 2024 (17:48 IST)
டாஸ்மாக் கடைகளை தற்போது குறைக்க முடியாது என்றும் குடிப்பழக்கம் உள்ளவர்களை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
 
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளுக்கடை திறப்பது குறித்து ஆய்வு செய்து பல துறைகளில் பேசி முடிவெடுக்க வேண்டும் என்றார். டாஸ்மாக் கடைகளை குறைப்பது என்பது உடனடியாக செய்ய முடியாது என தெரிவித்த அமைச்சர் முத்துசாமி, குடிப்பழக்கம் உள்ளவர்களை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் என்று கூறினார்.
 
மேலும் செப்டம்பர் மாதம் முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது என்று அவர் கூறினார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். 

ALSO READ: மேலும் 1.48 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை.! தமிழக அரசு அதிரடி..!!
 
விக்கிரவாண்டி தேர்தலில் 63% ஓட்டுகள் திமுகவிற்கு கிடைக்கும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளதாகவும், அதைவிட கூடுதல் ஓட்டுகள் திமுகவுக்கு கிடைக்கும் எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைவர் பதவியிலிருந்து தூக்கிய ராமதாஸ்! அதிர்ச்சியில் அன்புமணி! - கட்சியை விட்டு விலகுகிறாரா?

இன்ஸ்டாகிராம்ல சின்ன பசங்க அதை பண்ண முடியாது! - புதிய கட்டுப்பாடுகள்!

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments