Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக்-க்கு சீல்: தவிக்கும் மது பிரியர்கள்!!

Webdunia
சனி, 9 மே 2020 (10:34 IST)
டாஸ்மாக் கடைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. 
 
தமிழகத்திலும் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என பலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் மதுக்கடைகள் திறக்க இருப்பதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 
இந்த மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக்யை மூடும்படி உத்தரவிட்டது. மேலும், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட வேண்டும் என மாவட்ட மேலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து டாஸ்மாக் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்டுக்கு ஒரு ஓட்டு.. இளைஞர்களை குறி வைக்க வேண்டும்: விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசனை..!

ஒரு யூனிட் ரூ.20க்கு தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதா? அன்புமணி ஆவேசம்..

பஞ்சாபில் திடீர் திருப்பம்.. முதல்வர் ஆகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்.. பரபரப்பு தகவல்..!

எக்ஸ் நிறுவனத்தை வாங்க தயார்.. எலான் மஸ்கிற்கு பதிலடி கொடுத்த ஓபன் ஏஐ சிஇஓ..!

10 எம்.எல்.ஏக்கள் கட்சி மாறுகிறார்களா? பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு ஆபத்து?

அடுத்த கட்டுரையில்
Show comments