கொரோனா அதிகரிப்பு: கோவையில் முக்கிய இடங்களில் டாஸ்மாக் மூடல்!

Webdunia
சனி, 7 ஆகஸ்ட் 2021 (08:37 IST)
கோவையில் ஞாயிற்றுகிழமைகளில் முக்கியமான 9 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் டாஸ்மாக் கடைகளில் செயல்படும் நேரத்தை குறைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 
 
தற்போது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மதுக்கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் இனி மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசிடம் அனுமதி கோரப்படும் என்றும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு பின் இது குறித்த அறிவிப்பு வெளிவர வாய்ப்பிருப்பதாகவும் டாஸ்மார்க் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 
 
இதனிடையே கோவையில் ஞாயிற்றுகிழமைகளில் முக்கியமான 9 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, துடியலூர் சந்திப்பு ஆகிய இடங்களில் 9 மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments