டாஸ்மாக் கடையை 2 மணிக்கு திறந்தால் என்ன? - நீதிமன்றம் கேள்வி

Webdunia
செவ்வாய், 10 ஜூலை 2018 (18:27 IST)
தமிழகத்தில் டாஸ்மாக் கடையை மாலை 2 மணிக்கு திறந்தால் என்ன சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 
தமிழகத்தில் மூலைக்கு மூலை டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருந்த நேரத்தை, ஜெயலலிதா நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என மாற்றியமைத்தார். தற்போதும் இதுவே நடைமுறையில் இருக்கிறது.
 
இந்நிலையில், டாஸ்மாக் கடைக்கு அருகில் உரிமம் பெறாமல் பார்கள் செயல்படுவதாகவும், அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் தரமானதாக இருக்கிறதா என சோதனை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக்கை 2 மணிக்கு திறந்தால் என்ன? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதேபோல், மதுக்கடை பார்களில் உணவுப்பொருட்கள் தரமாக இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
 
டாஸ்மாக் கடைகளை 2 மணிக்கு திறப்பதில் என்ன கொள்கை முடிவு எடுக்க வேண்டியிருக்கிறது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி இதுபற்றி தமிழக அரசு பதில் தர அவகாசம் கொடுத்து, இந்த வழக்கை வருகிற 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி சென்னை - பெங்களூரு 1 மணி நேரம் தான்.. சென்னை - ஐதராபாத் 3 மணி நேரம் தான்.. அதிவேக ரயில் அறிமுகம்..

10 கேட்கும் தேமுதிக? 5 தான் என கறாராக சொல்லும் திமுக? என்ன செய்ய போகிறார் பிரேமலதா?

2026-ல் ஆட்சி பீடத்தை கைப்பற்றுவதே நமது இறுதி இலக்கு.. தவெக 3ஆம் ஆண்டு குறித்து விஜய்..!

பிரபல ஊடகத்திற்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்.. என்ன காரணம்?

பங்குச்சந்தையில் புதியவரி.. இன்ட்ரா டே வர்த்தகர்களுக்கு ஆப்பு வைத்த நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments