'சர்கார்' படத்தை திரையிட முடியாது: முன்னணி திரையரங்கம் கூறியது ஏன் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 4 நவம்பர் 2018 (21:34 IST)
விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தை திரையிட தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகள் போட்டி போட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் சர்கார் நாளை மறுநாள் வெளியாகிறது.

ஆர்.கே.சுரேஷ் நடித்த 'பில்லா பாண்டி' மற்றும் தினேஷ் நடித்த களவாணி மாப்பிள்ளை' ஆகிய திரைப்படங்கள் மிக குறைந்த திரையரங்குகளில் மட்டுமே வெளியாகிறது. இந்த நிலையில் தஞ்சையில் உள்ள முன்னணி திரையரங்குகளில் ஒன்றான ராணி பாரடைஸ் என்ற திரையரங்கு சர்கார் படத்தை திரையிட மறுத்துவிட்டதாக அந்த திரையரங்கின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது

'சர்கார்' படத்தை திரையிட்டால் முதல் இரண்டு நாட்களின் காட்சிகளின் டிக்கெட்டுக்களை பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என விநியோகிஸ்தர்கள் கட்டாயப்படுத்தியதால் தங்கள் திரையரங்கில் 'சர்கார்' வெளியாகவில்லை என்றும் தீபாவளி அன்று இரண்டு காட்சிகள் களவாணி மாப்பிள்ளை திரைப்படமும் இரண்டு காட்சிகள் பில்லா பாண்டி திரைப்படமும் வெளியாகும் என்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் திரையரங்கின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்பாராத தோல்வி: பிகார் தேர்தல் முடிவுகள் பற்றி ராகுல் காந்தி கருத்து

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments