Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர் போராட்டத்தின் வெற்றி: பெப்சி, கோக் விற்பனை செய்ய மாட்டோம்.. வணிகர் சங்கம் அதிரடி

இளைஞர் போராட்டத்தின் வெற்றி: பெப்சி, கோக் விற்பனை செய்ய மாட்டோம்.. வணிகர் சங்கம் அதிரடி

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2017 (15:18 IST)
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அறவழியில் போராடினர். இந்த போராட்டத்தின் போது பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு பானங்களை தடை செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.


 
 
இந்நிலையில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு வணிகர் சங்கம் பெப்சி, கோக் போன்றவற்றை விற்பனை செய்ய மாட்டோம் என தமிழ்நாடு வணிகர் சங்கம் கூறியது. இந்நிலையில் வரும் மார்ச் 1 முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.
 
விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர், பெப்சி, கோககோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனையை மார்ச் 1-ஆம் தேதி முதல் நிறுத்த உள்ளோம். மேலும் உள்நாட்டு குளிர்பானங்கள் விற்பனையை ஊக்குவிப்போம் என்றார்.
 
வெளிநாட்டு குளிர்பானங்களை குடிக்க மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் கோஷமாக முன் வைத்தனர். அவர்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments