நாளை டாஸ்மாக் மூடல்: இன்றே படையெடுக்கும் மதுவிரும்பிகள்!

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (09:51 IST)
நாளை மக்கள் ஊரடங்கை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்படுவதாக அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் நாளை ஊரடங்கை செயல்படுத்துமாறு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதை தொடர்ந்து தமிழகத்தில் பேருந்து, ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகர் சங்கமும் கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே டாஸ்மாக் அருகே செயல்படும் பார்கள் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகள் மட்டும் செயல்பட்டு வரும் நிலையில் நாளை டாஸ்மாக்குகளை முழுவதுமாக மூடுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாளை கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதால் இன்று காலை மதுக்கடைகள் திறக்கும் முன்னரே மதுவிரும்பிகள் டாஸ்மாக் முன்னர் குவிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் நாளை டாஸ்மாக் செயல்படாது என்பதால் மதுவை கள்ள மார்க்கெட்டில் விற்க முயன்றால் அதுகுறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments