9 மாவட்டங்களுக்கு காத்திருக்கு கனமழை..! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (10:17 IST)
தமிழகத்தில் அடுத்த சில மணி நேரங்களில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. 

ALSO READ: தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை: இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

வங்கக் கடலில் தாழ்வு மண்டலம்.. 16 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் 5000 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது: சேலம் கொலை குறித்து அன்புமணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments