தமிழகத்தில் இன்றும், நாளையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழைக் காலம் முடிந்த நிலையில் பல்வேறு பகுதிகளிலும் வெயில் வாட்டி வருகிறது. அவ்வபோது பெய்து வரும் மழையால் வெயில் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. இந்நிலையில் இன்றும், நாளையும் தமிழகத்தில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாளை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, கன்னியாக்குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K