Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்! – மு.க.ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் சந்திப்பு!

Webdunia
திங்கள், 3 மே 2021 (13:32 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் கொரோன தடுப்பு பணிகள் குறித்து தமிழக தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முதல்வராக பதவியேற்றதும் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக கொரோனா குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்நிலையில் இன்று தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளனர். பதவியேற்புக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அடுத்ததாக தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் தனியாக ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments