Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாவட்டங்களில் கொரோனா; சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (13:10 IST)
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் மீண்டும் 4 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் எச்சரித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில காலமாக குறைந்து வந்த நிலையில் சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது பேசியுள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக எச்சரித்துள்ளார். மேலும் சென்னையில் பிஏ 4 தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மக்கள் கவனக்குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments