Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குனி வெயிலுக்கு நடுவே பரவலாக மழை! – மக்கள் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (08:53 IST)
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி வெப்பம் வாட்டி வரும் நிலையில் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வழக்கத்தை விட 2 அல்லது 3 டிகிரி வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் அனல்காற்றும் வீசுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முதலாக தமிழகத்தில் சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர் பகுதிகளில் மிதமான அளவு மழை பெய்ததால் சூடு தணிந்தது. அதேபோல புதுக்கோட்டையில் அறந்தாங்கி, விராலிமலை, ஆலங்குடி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments