இந்தியாவில் கொரோனா பரவும் டாப் 8 மாநிலங்களில் தமிழகம்? – மத்திய சுகாதாரத்துறை!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (09:38 IST)
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவும் மாநிலங்களில் தமிழகமும் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் குறைந்தது. ஆனால் தற்போது மீண்டும் தினசரி பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவதால் எல்லையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில தினங்களில் உலக அளவில் அமெரிக்க, கனடா, ஆஸ்திரேலியாவை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கேரளா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், தமிழகம், லட்சத்தீவுகள் உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments