ஸ்டெர்லைட் ஆலை மூடல் – தமிழக அரசுக்கு முழு அதிகாரம் !

Webdunia
புதன், 7 ஆகஸ்ட் 2019 (09:09 IST)
ஸ்டெர்லைட் ஆடையை மூடியது சம்மந்தப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு சார்பில் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் கழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என மக்கள் போராட்டம் நடந்தபோது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர். 

இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் வேதாந்தா தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது தமிழக அரசு தன் வாதத்தை முன்வைத்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணை வந்தபோது தமிழக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஸ்வநாதன்’ மாசு ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் ஆலைகளை மூட தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அந்த வகையில் நீர் மாசு தடுப்புச் சட்டத்தின் கீழ் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது நியாயமானது. ஸ்டெர்லைட் ஆலை அதிகக் கழிவுகளை வெளியேற்றி வந்ததாலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது,’ என வாதிட்டார்.

இந்நிலையில் தமிழக அரசு வாதம் முடியாத நிலையில் வழக்கு விசாரணை இன்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

நீதிமன்ற அவமதிப்பு மனு.. பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா பெண் வழக்கறிஞர் பீகார் தேர்தலில் வாக்களித்தாரா? வைரல் பதிவு..!

மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதாது.. கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments