Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு தொடங்குகிறது! – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (10:50 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் பள்ளிகள் தொடங்கப்படாமல் உள்ள நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படுவதாய் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் செயல்படாமல் இருந்து வருகின்றன. இந்நிலையில் 1 முதல் 10 வகுப்புகள் வரை அனைவருக்கும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. தேர்சி அறிவிக்கப்பட்ட பிறகும் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வந்தது. கொரோனா பாதிப்புகள் நீண்ட நாட்கள் நீட்டிக்க கூடியதாக இருப்பதால் தனியார் பள்ளிகள் தற்போது ஆன்லைன் வழியாகவே மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அடுத்த வாரம் திங்கட்கிழமை (ஜூன் 13) முதல் அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

ஆனால் பல அரசு பள்ளி மாணவர்களிடம் ஆன்லைன் வகுப்பிற்கான தொழில்நுட்ப வசதிகள் இல்லாத சூழலில் அவர்கள் எப்படி ஆன்லைன் பாடங்களை கற்க இயலும் எனவும் கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments