Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 4 கோடியை தாண்டிய தடுப்பூசி செலுத்தியவர்கள் – புதிய சாதனை!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (12:19 IST)
தமிழகத்தில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில் மொத்த தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி விரைவாக எடுத்துக் கொள்ள கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 23 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் அதை தொடர்ந்து இன்று மீண்டும் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இந்த முறை 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காலை 11 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகம் முழுவதும் 3.96 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் நாளே எதிர்க்கட்சிகள் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு.. டிரம்ப் கருத்துக்கு விளக்கம் கோரி ஆர்ப்பாட்டம்..!

பாகிஸ்தான் அதிபர் ஆகிறாரா அசீம் முனீர்? பிரதமருக்கு தெரியாமல் செல்லும் சுற்றுப்பயணம்..!

2006ஆம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு.. .. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை..!

சசி தரூரை ஓரங்கட்டும் கேரள காங்கிரஸ்: மோடியை புகழ்ந்ததால் வெடித்த மோதல்!

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments