Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 74 ஆக உயர்வு

Tamilnadu
Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (11:32 IST)
தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியிருந்த நிலையில், தற்போது மேலும் 7 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில், திருவனந்தபுரத்தில் இருந்து வந்த ஒருவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த உள்ளூர் நபருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இவர் கொரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதுத்தவிர விழுப்புரம் மற்றும் மதுரையை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 67லிருந்து 74 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காசா மீதான தாக்குதலில் 400 பேர் பலி.. காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கண்டனம்..!

விமானம் பறப்பதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்ததால் வேலை வாய்ப்பை இழந்த இளைஞர்..!

மார்பகங்களை பிடிப்பது பாலியல் வன்கொடுமை குற்றம் அல்ல: அலகாபாத் உயர்நீதிமன்றம்

மருமகன் கொலை.. மகளை தூக்கிலிடுங்கள்: பெற்றோர் வைத்த கோரிக்கை..!

சேகர் பாபு என்னை ஒருமையில் பேசினார், முதல்வர் செயலால் வருத்தம்: வேல்முருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments