தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா? 11 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்கள் பெங்களூர் பயணம்

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (13:40 IST)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரியே தொடர வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தமிழக  காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திக்கவுள்ளனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு  தனித்தனியே  கோஷ்டியும் உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரியை டெல்லி தலைமை நியமித்தது.

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி  பதவியேற்று ஐந்து ஆண்டுள் ஆகியுள்ள நிலையில், அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால்,  புதிய காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

எனவே, புதிய காங்கிரஸ் தலைவராக மூத்த தலைவர்கள் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரியே தொடர வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தமிழக  காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திக்கவுள்ளனர்.

இதற்ககாக, 11 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்களுடன் தமிழக மூத்த காங்கிரஸ்  நிர்வாகிகளும் கார்கேவை சந்திக்க பெங்களூருக்குப் பயணம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

SIR படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

இனி புதிய பைக், கார் வாங்கினால் ஆர்.டி.ஓ.வுக்கு போக வேண்டாம்: வாகனப்பதிவு டிஜிட்டல் மயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments