அரசு ஊழியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்..

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (09:04 IST)

வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பழைய ஊதியக் கொள்கைகளை அமல்படுத்தக் கூறி அரசு ஊழியர்கள் மற்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தை வரும் டிசம்பர் 4 ஆம் தேதி காலவரையற்றப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். மேலும் அரசு தங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் கஜா புயல் நிவாரணப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் விரைவில் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அதுவரை பொறுமை காத்து அரசு ஊழியர்கள் மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments