Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஃபேல் வாட்ச் நம்பர் மாறியது எப்படி? – எச்சில் தொட்டு காட்டிய அண்ணாமலை!

Webdunia
ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (11:42 IST)
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அளித்த ரஃபேல் வாட்ச் ரசீது எண்ணும், வாட்ச் எண்ணும் மாறியிருப்பது குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தொடர்ந்து பல அரசியல் சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபமாக திமுக சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் என ஒரு பட்டியலை அவர் வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் கட்டியுள்ள லிமிடெட் எடிசன் ரஃபேல் வாட்ச் காரணமாக அவரே சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

ALSO READ: வேறு சமூக பெண்ணுடன் காதல்! சொந்த மகனை துள்ளத் துடிக்க கொன்ற தண்டபாணி!

பல லட்சம் மதிப்புள்ள ரஃபேல் வாட்ச்சை அண்ணாமலை வாங்கியது எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் அதன் பில்லை வெளியிடுவேன் என அண்ணாமலை கூறியிருந்தார். அதன்படி ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்ட அவர் அதை கோவையை சேர்ந்த சேரலாதன் என்பவரிடம் இருந்து ரூ.3 லட்சத்திற்கு வாங்கியதாக விளக்கம் அளித்திருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அந்த ரஃபேல் வாட்ச் குறித்து பேசியபோது தனது வாட்ச் சீரியல் எண் 149 என்று கூறியிருந்தார். ஆனால் அவர் அளித்த வாட்ச் பில்லில் சீரியல் எண் 147 என்று இருந்தது. இது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்கு உள்ளானது.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்த அண்ணாமலை, வாட்ச்சின் சீரியல் எண் 147 தான் என்றும், தான் அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது எண் சின்னதாக இருந்ததால் தவறுதலாக 149 என படித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் வாட்ச்சின் சீரியல் எண் உள்ள பகுதியில் எச்சில் தொட்டு கரையை நீக்கி அந்த சீரியல் எண்ணை பத்திரிக்கையாளரிடமும் காட்டி அண்ணாமலை தெளிவுப்படுத்தினார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments