Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக கேரள முதல்வர்கள் ஆலோசிக்க திட்டம்… முல்லை பெரியாறு அணை விவகாரம்!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (15:00 IST)
முல்லை பெரியார் அணையை பற்றி மீண்டும் சர்ச்சையான கருத்துகள் எழ ஆரம்பித்துள்ளன.

முல்லை பெரியார் அணை வலுவற்று இருப்பதாகவும் அதனால் அதன் கொள்ளளவை குறைக்க வேண்டுமென்றும் நீண்ட நாட்களாக வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் அணையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ள மத்திய அரசு முல்லை பெரியார் அணை வலுவாக உள்ளதாகவும், அணை கதவுகள், மதகுகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்த பழுதுகள் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சிறுசிறு பணிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்பிரச்சனையைப் பற்றி பேச தமிழக மற்றும் கேரள முதல்வர்கள் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments