Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகதாது அணை விவகாரம்; 12ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (12:48 IST)
மேகதாதுவில் கர்நாடக அணை கட்ட மேற்கொள்ளும் முயற்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது தமிழகத்தில் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கூறி கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதில் கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக விவசாயத்திற்கு காவிரி நீர் இன்றியமையாதது என்றும், எனவே மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை கைவிடுமாறும் வலியுறுத்திய கடிதத்தை எடியூரப்பாவுக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் இரு மாநில அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 12ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments