Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணாநிதியை நினைத்து வேதனையடைந்த தமிழிசை: விரைவில் நலம் பெற வாழ்த்து!

கருணாநிதியை நினைத்து வேதனையடைந்த தமிழிசை: விரைவில் நலம் பெற வாழ்த்து!

கருணாநிதியை நினைத்து வேதனையடைந்த தமிழிசை: விரைவில் நலம் பெற வாழ்த்து!
, புதன், 26 அக்டோபர் 2016 (10:32 IST)
திமுக தலைவர் கருணாநிதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வெடுத்து வருகிறார். இதனால் யாரும் அவரை பார்க்க வரவேண்டாம் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.


 
 
இது குறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், தலைவர் கலைஞர் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார்கள்.
 
மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் தலைவர் கலைஞர் அவர்களை ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள். எனவே பார்வையாளர்கள் தலைவர் கலைஞர் அவர்களைக் காண வருவதைத் தவிர்த்து, ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று கூறப்பட்டது.
 
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி விரைவில் உடல் நலம் பெற்று அரசியல் பணியில் திரும்ப தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மூத்த தலைவர் மரியாதைக்குரிய கலைஞர் அவர்கள் ஒவ்வாமை பிரச்சனையால் உடல் நலம் பாதிப்படைந்தார் என்று கேள்விப்பட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன். அவர்கள் பூரண குணமடைந்து அவர்களின் இயக்க பணியையும், அரசியல் பணியையும் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இடைத்தேர்தல்: 4 தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்