குமாரசாமி பதவியேற்பிலும் கருப்பு சட்டையா? ஸ்டாலினை கலாய்த்த தமிழிசை!

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (15:43 IST)
எதுக்கெடுத்தாலும் கருப்பு சட்டை அணியும் ஸ்டாலின், குமாரசாமி பதவி ஏற்பிலும் கருப்பு சட்டை அணிந்து கலந்துகொள்வாரா என கிண்டல் செய்துள்ளார் தமிழிசை. 
 
பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, உண்மையில் காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டு எடுக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய பங்கு வகிப்பது மத்திய அரசின் வரைவு திட்டம்தான். 
 
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நமக்கு நிச்சயம் தண்ணீர் வரும். இதன் வெற்றி கூட்டம் பாஜக சார்பாக 40 இடங்களில் நடைபெற உள்ளது. கருணாநிதியின் பிறந்தநாள் விழா, காவிரி மீட்டெடுத்த வெற்றி கொண்டாட்டமாக கொண்டாடுவதாக ஸ்டாலின் கூறியுள்ளது தவறானது. 
 
திமுகவின் தோல்விதான் இன்று வெளிப்படையாக காவிரியில் வெற்றியாக வந்துள்ளது. கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவி ஏற்பில் திமுக கலந்துகொள்வது தவறு இல்லை. தமிழ் உணர்வும் தமிழ்நாடு பற்றும் திமுகவிற்கு இல்லை. எதுக்கெடுத்தாலும் கருப்பு சட்டை போடும் ஸ்டாலின், குமாரசாமி பதவி ஏற்பில் கருப்பு சட்டை அணிந்து கலந்துகொள்வார்களா? என கேட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரைக்குச் செல்லத் தடை நீட்டிப்பு: மோசமான வானிலை காரணமாக நடவடிக்கை!

புயலால் இலங்கையில் சிக்கி தவித்த இந்தியர்கள்.. அதிரடியாக மீட்ட இந்திய விமானப்படை..!

சிலிண்டர் விலை 10 ரூபாய்க்கும் மேல் குறைவு.. வழக்கம்போல் வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை..!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை உயர்வு.. சென்செக்ஸ் 86000ஐ தாண்டி உச்சம்..!

ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.720 அதிகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments