மக்கள் வரிப்பணம் குறித்து பேசுபவர்கள் இலாகா இல்லாத அமைச்சரை வைத்திருப்பது ஏன்? தமிழிசை

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (13:48 IST)
மக்கள் வரிப்பணம் குறித்து பேசுபவர்கள் இலாகா இல்லாத அமைச்சரை இத்தனை மாதம் வைத்திருப்பது ஏன் என தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தபோது ’நாங்கள் உங்கள் அப்பன் வீட்டு பணத்தை கேட்கவில்லை, மக்கள் வரிப்பணத்தை தான் மக்களுக்காக செலவு செய்ய கேட்கிறோம்’ என்று தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள தமிழிசை சௌந்தரராஜன் ’மக்கள் வரிப்பணம் குறித்து பேசுபவர்கள் இலாகா இல்லாத அமைச்சரை வைத்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுப்பி உள்ளார்.  
 
தமிழகத்தில் இலாகா  இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி பல மாதங்களாக உள்ளார் என்பதும் அவர் சிறையில் இருக்கும் போது அமைச்சராக தொடர்வதால் அமைச்சருக்குரிய சம்பளம் கொடுக்கப்படுகிறது என்றும் இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷாவுன் சந்திப்பு ஏன்?.. ஓப்பனாக சொல்லிட்டாரே ஓபிஎஸ்!...

ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய தவெக கட்சியினர்.. செங்கோட்டையன் வரவால் மாற்றமா?

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வு!

மூன்று முறை உத்தரவு பிறப்பித்தும் அதனை அரசு ஏன் நிறைவேற்றவில்லை? தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments