Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா பார்ப்பவர்களையும் அடிப்பீர்களா? - திரைத்துறைக்கு தமிழிசை கேள்வி

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (09:58 IST)
ஐபிஎல் போட்டியை எதிர்த்த சினிமாத்துறையினர் தற்போது சினிமா பார்ப்பவர்களையும் அடிப்பார்களா என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட பலர் சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்தினர். மேலும், போட்டி நடைபெற்ற போது, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் மைதானத்திற்குள் செருப்பை வீசினர்.  
 
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்ப, சென்னையில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும்,  கல்கத்தா, புனே உள்ளிட்ட ஆகிய மாநிலங்களுக்கு மாற்றப்பட்டது. 
 
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் சினிமா துறையினர் நடத்தி வந்த வேலை நிறுத்தம்  முடிவிற்கு வந்தது. அதைத் தொடர்ந்து  வழக்கம் போல் புதிய படங்கள் வெளியாகும், படப்பிடிப்புகள் தொடங்கும் என விஷால் அறிவித்துள்ளார். 
 
இதைக்கண்டு கொதிப்படைந்த கிரிக்கெட் ரசிகர்கள், ஸ்கோரா, சோறா என எங்களை கேட்டனர். தற்போது சினிமாவை மட்டும் நாங்கள் ஏன் பார்க்க வேண்டும்? நாங்கள் அதையும் புறக்கணிக்கிறோம் என டிவிட்டரில் கிளம்பியுள்ளனர். 
 
இது ஒருபக்கம் இருக்க, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் “ஐபிஎல் கிரிக்கெட் கேளிக்கை என எதிர்த்த திரைத்துறையினர் நாளை ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் கேளிக்கையா? என்ற கேள்விக்கு பதில்சொல்வார்களா? திரைப்படத்தை பார்க்கச்செல்லும் தமிழர்களை அடிப்பார்களா? இல்லை தங்கள் துறை என்பதால் தெரியாதது போல் நடிப்பார்களா?” என நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments