விருதுநகர் தொகுதியை குறிவைக்கும் தமிழிசை.. திமுக கூட்டணியில் இந்த வாரிசு பிரபலமா?

Mahendran
திங்கள், 29 ஜனவரி 2024 (14:33 IST)
புதுவை மற்றும் தெலுங்கானா கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான ஒப்புகைக்காக அவர் காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை அவருக்கு தேர்தலில் போட்டியிட பாஜக தலைமை கிரீன் சிக்னல் காட்டவில்லை என்றாலும் விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு தமிழிசை தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டால் விருதுநகர் தொகுதி அவருக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த தொகுதியை தான் திமுக கூட்டணியில் உள்ள  மதிமுக குறி வைத்துள்ளது என்றும் வைகோவின் மகன் துரை வைகோ இங்கு போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இது காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் காங்கிரஸ் விட்டுக்கொடுக்குமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. மொத்தத்தில் விருதுநகர் தொகுதி விஐபி பகுதியாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments