தவெக செயற்குழு கூட்டம் தொடங்கியது.. கூட்டணி நிலைப்பாட்டை வெளியிடுவாரா விஜய்?

Mahendran
வெள்ளி, 4 ஜூலை 2025 (13:08 IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் கூட்டணி குறித்த தனது நிலைப்பாட்டை வெளியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் கட்சி அலுவலகத்தில் சற்றுமுன் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது. இதில் கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
 
இந்த கூட்டத்தில், முதல் கட்டமாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 100 இடங்களுக்கு விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதேபோல், தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணி குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்று கூட்டணி குறித்த நிலைப்பாட்டை விஜய் தீர்மானமாக வாசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
விஜய் தனித்துப் போட்டியிடுவாரா அல்லது தனி கூட்டணி அமைத்துப் போட்டியிடுவாரா அல்லது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேருவாரா என்பதற்கு இன்று பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 கி.மீ. நீளம், 25 மீ. ஆழம், 80 அறைகள்.. ஹமாஸ் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல் ராணுவம்..!

சக பெண் ஊழியருடன் கள்ளக்காதல்.. மனைவி, 2 குழந்தைகளை தலையணையால் அமுக்கி கொலை..!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.. தேர்வு தேதி என்ன?

ஜோதிமணி எம்பி, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு.. என்ன காரணம்?

நேத்து முளைச்ச காளான்லாம்!.. விஜயை சொல்கிறாரா பிரேமலதா?!...

அடுத்த கட்டுரையில்
Show comments