Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம்.. தேதியை அறிவித்த விஜய்..!

Siva
வெள்ளி, 14 மார்ச் 2025 (19:00 IST)
தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் குறித்த தேதியை, கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதனால், கட்சி தொண்டர்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 18 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம், விஜய் தலைமையில் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் மையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ளார். அனைத்து நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், இந்த கூட்டத்தில் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

பயங்கரவாதிகளை முட்டாளாக்கி குடும்பத்துடன் தப்பிய அஸ்ஸாம் பேராசிரியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments