Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 21 ஆம் தேதி வரை மழை!

Webdunia
ஞாயிறு, 18 ஜூலை 2021 (09:45 IST)
வங்கக்கடலில் 21 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல இடங்களில் நேற்று மாலை முதல் மழை கொட்டி தீர்த்தது. 

 
இதன்படி நேற்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. 
 
அதேபோல் சென்னையில் நேற்று நகர் முழுவதும் நல்ல மழை பெய்துள்ள நிலையில் இன்றும் நாளையும் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மாநிலத்தில் 21 ஆம் தேதி வரை பரவலாக மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் பிரதமர்.. ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் மூவரும் சந்திக்க அனுமதி இல்லை..!

தமிழகம் மீது அக்கறை இருந்தா.. தமிழ் மண்ணில் இந்த உறுதிமொழியை குடுங்க பிரதமரே! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments