Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் 17ஆம் தேதி வரை மழை!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (14:06 IST)
நாளை முதல் 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டில், புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு.


தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

இதனால் தமிழகத்தில் மேலும் பல பகுதிகளில் கனமழை நீடிக்கும் நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறையும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் காற்றழுத்த தாழ்வு மாற்றங்கள் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று முதல் 15 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து மேற்கு திசை காற்றின் வேக மாறுபட்டால் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டில், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதோடு சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என   தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

ஏப்ரல் 5 வரை வெளுத்து வாங்க போகும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கச்சத்தீவு தீர்மானம் ஒரு நாடகம்.. 4 வருடமாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஈபிஎஸ்

தர்பூசணியில் நிறமிகள் கலப்பா? விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி! - ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியது என்ன?

பாகிஸ்தான் அதிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments