Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தில் மழை... வானிலை அப்டேட்!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (12:48 IST)
டிசம்பர் 17, 18 ஆம் தேதி தென் மாவட்டங்கள், கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

 
தமிழகத்தில் கடந்த மாதம் முதலாக வடகிழக்கு பருவக்காற்றால் தொடர் மழை பெய்து வந்தது. மேலும் வங்க கடலில் தொடர்ந்து அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் பல மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமான மழை பொழிந்தது. 
 
கடந்த சில நாட்களாக புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகாத நிலையில் மிதமான அளவில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் டிசம்பர் 17, 18 ஆம் தேதி தென் மாவட்டங்கள், கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
மேலும் இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு எதிர்வரும் 17 ஆம் தேதி (நாளை) வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

வெள்ளை மாளிகையில் ஒரு கோமாளி தலைவராக இருக்கிறார்: ஒவைசி கடும் விமர்சனம்..!

முதல்முறையாக அந்தமானில் அமலாக்கத்துறை ரெய்டு.. ரூ.200 கோடி மோசடி கண்டுபிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments