Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் 5 நாட்களுக்கு மழை - சென்னையில் வானிலை நிலவரம் என்ன?

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (13:16 IST)
வளிமண்டல  சுழற்சியால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். 

 
கடந்த சில மாதங்களாக வெயிலின் வெப்பம் காரணமாக சென்னை மக்கள் தத்தளித்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான தட்ப வெட்பம் தற்போது இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிலும் நேற்று மாலை தொடங்கி விடிய விடிய சென்னையில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இந்நிலையில் சென்னை வானிலை மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் வளிமண்டல  சுழற்சியால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வட கர்நாடகா, மத்திய கிழக்கு அரபிக்கடல், ஆந்திரா, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று முதல் ஜூன் 26 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments