பலத்த காற்றுடன் கூடிய மழை - எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (16:03 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாளை மறுநாள் தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் கேரளா உள்ளிட்ட தென்இந்திய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது.  
 
மத்திய கிழக்கு,வடமேற்கு, தென்கிழக்கு அரபிக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தாமதமாக ஜூன் 5 ஆம் தேதி தொடங்கும் என கூறியிருந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது என இந்திய வானிலை மையம் அறிவிப்பு. 
 
இதனையடுத்து தமிழகம் மறும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல ஒத்த பைசா இல்ல.. இவ்ளோ சிசிடிவி கேமரா!. எழுதி வைத்துவிட்டு போன திருடன்!...

விஜய் அரசியலுக்கு வந்தது பணம் சம்பாதிக்கவே.. எனது கட்சியை தமாகா உடன் இணைக்கவுள்ளேன்: தமிழருவி மணியன்..!

ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பால் பரபரப்பு..!

மலாக்கா ஜலசந்தியில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments