அடுத்த 2 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (18:56 IST)
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
ஆம், வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. கடலூர், தஞ்சை, கரூர், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நேற்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்த நிலையில் இன்றும் அதே மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய பகுதிகளில் நாளை  இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments