Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்ட வருவாய் அலுவலரைக் கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.!!

J.Durai
வியாழன், 4 ஜூலை 2024 (15:31 IST)
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடந்து வரும் சூழ்நிலையில் வட்டாட்சியர் அலுவலக சுற்றுச்சூழலில் தமிழக அரசு தேனி மாவட்ட வருவாய்த்துறை நிர்வாகத்தை பல லட்சங்கள் பெற்றுக் கொண்டு சீரழித்து வரும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் பொது ஜஸ்டின் சாந்தப்பா ஆகிய இருவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணி மாறுதல் செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  பத்தாம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சூவரொட்டிகள் ஒட்டி உள்ளதால் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.
 
அந்த சுவரொட்டியில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் கடந்த (26 .10 .2023) மூன்று முறைகேடாக வெளியிடப்பட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் ஒருங்கிணைந்த முதுநிலை பட்டியலை உடனடியாக ரத்து செய்து சரியான பட்டியலை வெளியிடுக
 
2012 ஆம் ஆண்டு முதுநிலை வருவாய் ஆய்வாளர் பட்டியலில் தவறாக முதுநிலை நிர்ணயம் செய்யப்பட்ட முருகன் என்பவரை உரிய இடத்தில் வைத்துதிடுக.
 
தேனி மாவட்ட வருவாய் அழகில் உள்ள அனைத்து நிலை பணியாளர்களுக்கும் நடப்பு ஆண்டு வரை முதுநிலை பட்டியலை வெளிப்படை தன்மையுடன் உடனே வெளியிடுக.
 
தேனி மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 1/3 நேரடி நியமன பணியாளர்களை விட கூடுதலாக மூன்று மடங்கு நேரடி நியமன உதவியாளர்கள் பணி நியமனம் நியமன உதவியாளர்களுக்கு தவறாக மதிப்பீடு செய்து அனுப்பப்பட்ட அறிக்கையினை திரும்ப பெறுக.
 
மேற்கண்டவாறு தொடர்ந்து பதவி உயர்வு பணியாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் வகையில் ஊழியர் விரோத போக்கினை கடைப்பிடித்து வரும் அலுவலக மேலாளர் (பொது) ஜஸ்டின் சாந்தப்பா அவர்களை அலுவலக மேலாளர் பொது பணியில் இருந்து பணியிட மாறுதல் செய்து நடுநிலையோடு செயல்படும் தகுதி வாய்ந்த அலுவலர் நியமனம் செய்திடுக.
 
மேற்கண்ட கோரிக்கைகளை அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல இயக்க நடவடிக்கை முடிவு செய்யப்பட்டு வருகிற 10-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments