Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் சதத்தை தொட்டது வெப்பநிலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

Siva
செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (07:56 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், நேற்று ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, தமிழ்நாட்டில் கோடை காலம் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும். ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் கடும் வெப்பத்துடன் இருக்கும் என்பது தெரிந்ததே. குறிப்பாக, மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திரம் உச்சகட்ட வெயிலை கொண்டிருக்கும். ஆனால், இந்த வருடம் முன்கூட்டியே கோடை வெப்பம் தொடங்கிவிட்டதாக கருதப்படுகிறது.

பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே வெப்பநிலை அதிகரித்த நிலையில், ஒவ்வொரு நாளும் படிப்படியாக வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று ஈரோட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டில் முதல் முறையாக 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்த தொடங்கி விட்டதால், மக்கள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் பதிவு..!

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments