Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் நடைமுறைக்கு வந்தது விஜய்க்கான ஒய் பிரிவு பாதுகாப்பு.. 11 பேர் பாதுகாப்பு..!

Mahendran
வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (16:06 IST)
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த பாதுகாப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த ஆண்டு, தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், விஜய்க்கு அச்சுறுத்தல் எழுந்ததையடுத்து, அவரது பாதுகாப்பு கருத்தில் கொண்டு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து, விஜய்க்கு அறிவிக்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி, அவருக்கு 8 முதல் 11 மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உளவுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் தான் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments