Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ள நிவாரண உதவிகள் விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: வைகோ குற்றச்சாட்டு

Webdunia
புதன், 9 டிசம்பர் 2015 (14:28 IST)
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள வெள்ள நிவாரண உதவிகள் விவசாயிகளுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்திருக்கிறது என்று  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் உள்ளிட்ட நீர்ப்பாசனப் பயிர்களை அழித்துவிட்டது. வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் விவசாயிகள் அரசின் உதவிகளை எதிர்பார்த்து இருந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள வெள்ள நிவாரண உதவிகள் விவசாயிகளுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்திருக்கிறது. 
 
இந்நிலையில், விவசாயப் பயிர்களுக்கான பயிர்க் காப்பீட்டுப் பிரிமியத்தை டிசம்பர் 15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், சிட்டா, அடங்கல் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரி பரிந்துரை போன்ற ஆவணங்களை அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், நாகை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இணைய சேவைகள் முற்றிலும் செயலிழந்து உள்ளதால், விவசாயிகள் சிட்டா, அடங்கல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
இதனால், விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுக்கான பிரிமியம் தொகை செலுத்துவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31-ம் தேதி வரை நீடிக்க வேண்டும். மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பயிர்க் காப்பீட்டு பிரிமியம் தொகையை தமிழக அரசே செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்திள்ளார்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

Show comments