Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதலா? 4 பேர் படுகாயம்..!

Mahendran
வியாழன், 17 ஏப்ரல் 2025 (10:44 IST)
தமிழக மீனவர்கள் மீது இதுவரை இலங்கை கடற்படை தான் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது கடற்கொள்ளையர்கள் தாக்கியதாகவும் நான்கு மீனவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுவது மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கோடியக்கரை அருகே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கையிலிருந்து வந்த கடற்கொள்ளையர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்து, வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெகன், ராமகிருஷ்ணன், செந்தில், சாமுவேல் ஆகிய நால்வரும், அதிகாரப்பூர்வ அனுமதி பெற்று விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றிருந்தனர். அவர்கள் கோடியக்கரை அருகே பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென கடற்கொள்ளையர்கள் அரிவாள், கல், மரக்கட்டைகளை கொண்டு தாக்கியதாக தெரிகிறது.
 
மேலும், அவர்களின் விசைப்படகில் இருந்த மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள், செல்போன்கள் போன்றவையும் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் பின்னர், காயமடைந்த மீனவர்கள் மீண்டும் கரையை அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்தச் சம்பவம் மீனவர்களிடம் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments