Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி பயணம்: கூட்டணி குறித்து ஆலோசனை?

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2016 (13:06 IST)
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர்கள் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.


 

 
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தங்கள் அணிக்கு வருமாறு  காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
 
இந்நிலையில், தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை ராகுல்காந்தி டெல்லிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இதைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், ப.சிதம்பரம், தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன நாச்சியப்பன், தங்கபாலு, திருநாவுக்கரசர், ஜெயக்குமார், செல்லக்குமார், குமரி ஆனந்தன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்களை கட்சி மேலிடம் அழைத்துள்ளது.
 
20 ஆம் தேதி டெல்லியில் தமிழக தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அப்போது கூட்டணி உள்ளிட்ட தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
 
தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் ஒருங்கிணைப்பு இல்லாத சூழ்நிலை நிலையில், இந்த கூட்டம் கூடுவது கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments