ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

Mahendran
செவ்வாய், 25 மார்ச் 2025 (15:39 IST)
டெல்லி சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அங்கு யாரை சந்திக்க உள்ளார் என்பது எனக்கு தெரியும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
 
இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற இருமொழிக் கொள்கை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான விவாதத்தின் போது முதலமைச்சர் பதிலளிக்கையில்  ’தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை எந்த உணர்வோடு கடைப்பிடிக்கிறது என்பதையும், முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க. உட்பட பல்வேறு கட்சிகள் ஏன் இதற்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டுள்ளன என்பதையும் விளக்கினார். 
 
குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியை தவிர்ந்த மற்ற அனைத்து கட்சிகளும், இந்த கொள்கையின் மீது தங்கள் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தியுள்ளன என்று தெரிவித்தார்.
 
மேலும்  இந்த விவகாரத்தில் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம்" என்று உறுதியளித்துள்ளதாகவும், இதை கண்காணித்து, டெல்லியில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என்பதையும் முதலமைச்சர் தெரிவித்தார். "டெல்லிக்கு சென்றுள்ள அவரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாக இந்த அவையின் மூலம் வலியுறுத்துகிறேன்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் விபத்து: விமானி பரிதாப பலி

அடுத்த கட்டுரையில்
Show comments