Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

Mahendran
செவ்வாய், 4 மார்ச் 2025 (12:32 IST)
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மதுரையிலிருந்து மு.க. அழகிரி தனது தாயாரை பார்ப்பதற்காக  சென்னைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
வயது முதிர்வு காரணமாக ஓய்வில் இருந்த தயாளு அம்மாள் அவர்களுக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ குழுவினர் அவரை கண்காணித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு சென்னைக்கு திரும்பினார். மருத்துவரிடம் தனது தாயார் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
 
இந்த நிலையில், தயாளு அம்மாள் மூத்த மகன் மு.க. அழகிரி மதுரையிலிருந்து சற்றுமுன் சென்னைக்கு வந்துள்ளதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் தனது தாயாரை பார்க்க செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

இம்ரான்கானின் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை.. மோடி அரசின் இன்னொரு அதிரடி..!

அவசர அவசரமாக பிரதமரை சந்தித்த விமானப்படை, கப்பல் படை தலைவர்கள்.. இன்று போர் ஆரம்பமா?

ஜம்மு அணையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் தண்ணீர் நிறுத்தம்.. மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்..!

நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments