Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்பு - அம்மா உணவங்களில் இலவச உணவு

ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்பு - அம்மா உணவங்களில் இலவச உணவு
, சனி, 23 மே 2015 (11:51 IST)
ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றதை முன்னிட்டு, சென்னையில் உள்ள அம்மா உணவங்களில் காலை முதல் இரவு வரை இலவச உணவு வழங்கப்படுகிறது.
 
சென்னை மாநகராட்சியில், 207 அம்மா உணவகங்கள் உள்ளது. இந்த உணவகங்களில் மிக குறைவான விலையில் மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
 
இன்று காலை 11 மணிக்கு, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா மண்டபத்தில், தமிழக முதலமைச்சராக, அதிமுக பொதுச்செயலாளர்  ஜெயலலிதா பதவியேற்றார்.
 
இந்நிலையில், ஜெயலலிதா 5வது முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றதை, கொண்டாடும் வகையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் அனைத்திலும் இன்று காலை முதல் இரவு வரை இலவச உணவு வழங்கப்படுகிறது.
 
இதற்கான முழுசெலவு தொகையை சென்னை மேயர் சைதை துரைசாமி ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil