Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப முதல்வர் ஜெயலலிதா ஏற்பாடு

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2016 (11:29 IST)
இலங்கை யாழ்ப்பாணம் சிறையிலிருந்து பொங்கலை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் நேற்று விடுவிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு செய்யும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


 
 
தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதிய தொடர் கடிதங்கள் மூலமாக, மத்திய அரசு இலங்கை அரசை கேட்டுக்கொண்டதன் மூலம், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவிட்டார்.
 
இலங்கை சிறையில் உள்ள 104 தமிழக மீனவர்களில் முதற்கட்டமாக யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 55 மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள மீனவர்களும் இன்னும் ஓரிரு நாட்களில் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
நேற்று விடுதலை செய்யப்பட்ட 55 மீனவர்கள் அனைவரையும் தமிழகம் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Show comments