Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக தேர்தல் நிதி ரூ.14 கோடியை தாண்டியது

திமுக தேர்தல் நிதி ரூ.14 கோடியை தாண்டியது
, செவ்வாய், 28 ஜூலை 2015 (00:47 IST)
2016 ஆம் ஆண்டு, தமிழக சட்ட சபை தேர்தலை முன்னிட்டு, திமுக தேர்தல் நிதி ரூ.14 கோடியை தாண்டியுள்ளது.
 

 
2016 ஆம் ஆண்டு, தமிழக சட்ட சபை தேர்தலை முன்னிட்டு, தாராளமாக தேர்தல் நிதி வழங்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி, தனது கட்சி தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். 
 
இதனையடுத்து, திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் தேர்தல் நிதி அளித்தனர். 
 
அந்த வகையில், இதுவரை ரூ.14 கோடியே 5 லட்சத்து 48,554 தேர்தல் நிதி குவிந்துள்ளது. இதை திமுக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil