Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று எங்கெங்கு மழை? லிஸ்டு போட்ட வானிலை ஆய்வு மையம்

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (13:13 IST)
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. 
 
காற்று மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. 
 
இதுதவிர வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரையிலும் பெய்யலாம் எனவும், சென்னையின் பல பகுதிகளில் மேகமூட்டமாக வானம் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. 
 
இந்நிலையில் இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது. ஆம், கோவை, நீலகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, நாமக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!

வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments